#BREAKING அழகிரி மகள் கைது - காவல் நிலைய பிணையில் விடுவிப்பு
அடையாறு எஸ்பிஐ வங்கி மேலாளரை அறைந்த வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரி மகள் கயல்விழியிடம் காவல்துறையினர் விசாரணை செய்தனர்.
சென்னையில் எஸ்பிஐ வங்கி மேலாளர் கன்னத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகள் கயல்விழி அறைந்த வீடியோ இணையத்தில் வைரலாகிவருகிறது. அடையாறில் கயல்விழிக்கு சொந்தமான கட்டிடத்தில் இயங்கி வரும் எஸ்பிஐ வங்கியின் மேலாளரை கன்னத்தில் அறைந்தார். லிப்ட் செயல்பாடு தொடர்பான பிரச்சனை குறித்து பேச வந்த போது வங்கி மேலாளருடன் கயல்விழி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். கயல்விழி கோபமாக பேசுவதை வங்கி மேலாளர் கன்னத்தில் கையை வைத்து கேட்டுக் கொண்டு இருந்ததால் ஆத்திரமடைந்த அவர் ஓங்கி கன்னத்தில் அறைந்தார். இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென எஸ்பிஐ ஆர்.பி.ஓ-IISBI RBO-II முதன்மை மேலாளர் நமச்சிவாயம் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இதனையடுத்து எஸ்பிஐ வங்கி மேலாளரை அறைந்த விவகாரத்தில் மு.க.அழகிரியின் மகள் கயல்விழி மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
வங்கி மேலாளர் அளித்த புகாரின் பேரில் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் சாஸ்த்ரி நகர் காவல் நிலையத்தில் வைத்து கயல்விழியிடம் போலீசார் விசாரணை நடத்தினர். முடிவில் அவரை கைது செய்து காவல் நிலைய பிணையில் விடுவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.