‘அக்ஷயம் 365’- சென்னையில் இனி தினமும் மதியம் 12 மணிக்கு இலவச உணவு விநியோகம்
Updated: Dec 4, 2025, 21:35 IST
‘அக்ஷயம் 365’ என்ற பெயரில் சென்னையில் இனி தினமும் மதியம் 12 மணிக்கு இலவச உணவு விநியோகம் செய்யப்படுகிறது.
'பசியை ஒழிக்கும் ஒரு படி' என்ற ஸ்லோகனுடன் முத்ரா அவுட் ஆஃப் ஹோம் மற்றும் சென்னை ரோட்டரி கிளப் ஆஃப் சென்னை டவர்ஸ் இணைந்து ‘அக்ஷயம் 365’ என்ற முயற்சியை மேற்கொண்டுள்ளது. இதன்படி, அடுத்த 365 நாட்களுக்கு உணவு தேவைப்படுபவர்களுக்கு சென்றடைவதை உறுதி செய்வதற்கான ஒரு எளிய நோக்கத்தால் இயக்கப்படுகிறது.
இந்த முயற்சியை சாத்தியமாக்க, மனமிறங்கி இடம் வழங்கியுள்ளது சென்னை மாநகராட்சி. முதற்கட்டமாக, சென்னை தி.நகரில் உள்ள பாண்டி பஜார் காவல் நிலையத்திற்கு அருகில் ஸ்டால் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு தினமும் மதியம் 12 மணிக்கு உணவு விநியோகிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.