×

"செங்கோட்டையா? என்ன பொழப்பு இது.. அவமானமாக இருக்கு..எம்.ஜி.ஆர்., அம்மாவை விட விஜய் பெரிய தலைவரா?"- ஏ.கே.செல்வராஜ்

 


சத்தியமங்கலம் வடக்குப்பேட்டையில் மொழிப்போர் தியாகிகளுக்கான வீர வணக்க நாள் பொதுக்கூட்டம் நேற்றிரவு நடைபெற்றது. நிகழ்ச்சியில் பவானிசாகர் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் ஏ பண்ணாரி வரவேற்று பேசினாார். அதனைத் தொடர்ந்து அதிமுக புறநகர் மாவட்ட செயலாளர் ஏ.கே.செல்வராஜ் பேசும் போது, முன்னாள் அமைச்சரும் தவெக தலைமை ஒருங்கிணைப்பாளருமான கே.ஏ.செங்கோட்டையனை கடுமையாக தாக்கி பேசினார். 

கூட்டத்தில் அவர் பேசியது, “சென்னையில் நடந்த தெவக கூட்டத்தில் செங்கோட்டையன் பேசும்போது 50 ஆண்டு அரசியல் வரலாற்றில் விஜய் போன்று தலைவரை பார்த்தில்லை என பேசியுள்ளார். அப்படியென்றால் புரட்சித்தலைவரை காட்டிலும் ஜெயலலிதாவை காட்டிலும் விஜய் பெரிய தலைவரா? நா எப்படி வேண்டுமானும் பேசலாமா, உன் வயதில் அப்படி பேசுவதா, என்ன பிழைப்பு இது, என்ன பிழைப்பு இது, அவமானம், இது அவமானமாக இருக்கிறது. யார் பின்னாடி வேண்டுமானும் போங்கள், உங்கள் அரசியல் வாழ்க்கை அஸ்தமனமாகிவிட்டது. அதிமுக இயக்கத்தில் வளர்ந்து நல்ல நிலைக்கு வந்துவிட்டு தனியாக இருந்தால் நாகரீகமாக இருந்திருக்கும்.மதிப்பு மரியாத உயர்ந்திருக்கும். இவ்வளவு கீழ்தரமாக இறங்கி பேசுவது எவ்வளவு பெரிய அவமானமாக இருக்கிறது. கோபிசெட்டிபாளையம் அதிமுக கோட்டை, உங்களோடு இருந்தவர்கள் எல்லாம் இயக்கம் தான் பெரியது என்று எடப்பாடியார் பக்கம் உள்ளனர். விளையாட்டுப் போட்டியில் விசில் அடித்தால் அவுட் என்று அர்த்தம். செங்கோட்டையன் அரசியல் அவுட் ஆகிவிட்டது. நாவடக்கத்தோடு  பேசுங்கள்” என்றார்.