சாவிலிருந்து மீண்டுவந்த அஜிதாவின் அதிரடி எக்ஸ் பதிவு
Dec 29, 2025, 20:38 IST
2026-ல் தளபதியாரை முதல்வராக அரியணையில் ஏற்ற பலமடங்கு அதிக வேகத்தில் களப்பணியாற்ற உறுதி கொண்டுள்ளேன் என தவெகவை சேர்ந்த அஜிதா தெரிவித்துள்ளார்.
தவெக பெண் நிர்வாகி அஜிதா ஆக்னலை திமுக கை கூலி என கூறியதாலும், கட்சியில் எந்த பதவியும் வழங்காததாலும் மனம் உடைந்து கடந்த 25-ம் தேதி தூக்க மாத்திரைகள் சாப்பிட்டு தற்கொலை செய்ய முயன்று தூத்துக்குடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட்டிருந்த நிலையில், கடந்த நான்கு நாட்களுக்கு பிறகு உடல் நிலை சீரான நிலைக்கு திரும்பியதால் மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகு வீடு திரும்பினார்.