×

அஜிதா ஆக்னலுக்கு வாய்ப்பு மறுப்பு- தவெக கொடி, சின்னத்தை வீசியெறிந்த ஆதரவாளர்

 

தூத்துக்குடி சட்டமன்ற தொகுதி முழுவதும் வீடுகள் தெருகளில் தமிழக வெற்றிக்கலாக ஸ்டிக்கர்கள் கிழித்து எறியப்பட்டு வருகிறது.

தமிழகம் முழுவதும் தேர்தல் களம் சூடு பிடித்துள்ள நிலையில் ஒவ்வொரு கட்சிகளும் தங்களது வேட்பாளர்களை கடந்த மூன்று நாட்களாக பரபரப்பாக அறிவித்து வருகின்றனர் இந்த நிலையில் இன்று சென்னையில் நட்சத்திர விடுதியில் வைத்து தமிழக வெற்றி கழகம் சார்பில் 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை கட்சித் தலைவர் விஜய் இன்று அறிவித்தார்.

இந்த நிலையில் தூத்துக்குடி சட்டமன்ற தொகுதிக்கு நடிகரும் தனது நண்பருமான ஸ்ரீநாத்தை அறிவித்தார்.தூத்துக்குடி சட்டமன்ற தொகுதி முழுவதும் தமிழக வெற்றி கழகம் கட்சி ஆரம்பித்தது முதல் சுற்றுப்பயணம் மற்றும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வந்த அஜிதா ஆக்னல், கடந்த சில மாதங்களுக்கு முன்பு கட்சியில் பொறுப்பு கொடுக்கவில்லை என விஜயின் காரை பனையூர் இல்லம் முன்பு மறைத்து போராட்டத்தில் ஈடுபட்டார். அதோடு மாத்திரைகளை உட்கொண்டு தற்கொலை முயற்சி செய்த நிலையிலும் கட்சி நிர்வாகிகள் ஒரு வருத்தமோ அஜிதா ஆக்நலை தொடர்பு கொண்டு ஆறுதலோ கூறவில்லை. இருந்தாலும் தொடர்ந்து தூத்துக்குடியில் பணியாற்றி வந்த அஜிதா ஆக்னலுக்கு தூத்துக்குடி சட்டமன்ற தொகுதியை ஒதுக்காததால், தவெக தொண்டர்கள் தனது காரில் உள்ள கட்சி கொடியை கழற்றி வீசியதோடு கட்சி சின்னத்தையும் காரிலிருந்து வெளியே வீசி தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளார்.

இருந்தபோதிலும் புதியம்புத்தூர் பகுதியில் வீடுகள் மின்கம்பங்களில் ஒட்டப்பட்டுள்ள தமிழக வெற்றிக்கழக கொடி, விஜய் படம் பொறிக்கப்பட்ட ஸ்டிக்கர்கள் வெறுப்பில் கிழித்து எறியப்பட்டு வருகிறது அதோடு புதியம்புத்தூர் பகுதியில் தமிழக வெற்றி கழகம் சார்பில் ஏற்றப்பட்டு இருந்த கொடியும் இறக்கப்பட்டது. ஸ்டிக்கர்களை கிழிக்கும் போது 20 ரூபாய்க்கு ஸ்டிக்கர் வாங்கி ஒட்டி எந்த பயனும் இல்லை என பெண்கள் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். நடிகரும் தனது நண்பருமான ஸ்ரீநாத்திற்கு தூத்துக்குடி சட்டமன்ற தொகுதியை விஜய் ஒதுக்கிய நிலையில், தூத்துக்குடி தமிழக வெற்றிக்கழக தொண்டர்களிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.