×

பாலமேடு ஜல்லிக்கட்டில் சிறந்த மாடுபிடி வீரராக குலுக்கல் முறையில் அஜித் தேர்வு

 

பாலமேடு ஜல்லிக்கட்டில் சிறந்த மாடுபிடி வீரராக குலுக்கல் முறையில் அஜித் தேர்வு செய்யப்பட்டார்.


பாலமேடு ஜல்லிக்கட்டில் 16 காளைகளை அடக்கி சிறந்த மாடுபிடி வீரருக்கான கார் பரிசை தட்டிச்சென்றார் பொந்துகம்பட்டி அஜித். பாலமேடு ஜல்லிக்கட்டில் அஜித், பிரபாகரன் தலா 16 காளைகளை அடக்கி முதலிடத்தில் இருந்ததால் குலுக்கல் முறையில் அஜித் முதலிடம் தேர்வு செய்யப்பட்டார்.  பிரபாகரனுக்கு பைக் பரிசாக வழங்கப்பட்டது. பாலமேடு ஜல்லிக்கட்டில்  3ஆம் இடம் பிடித்த நாமக்கல் கார்த்திக்கு பைக் பரிசாக வழங்கப்பட்டது.


பரிசு வாங்கிய பின் செய்தியாளர்களிடம் பேசிய அஜித், “பாலமேடு ஜல்லிக்கட்டு ரொம்ப சவாலாக இருந்தது. முதலிடம் பிடித்தது மகிழ்ச்சி அளிக்கிறது. அதிக மாடு பிடித்து வெற்றி பெறுவேன் என்ற நம்பிக்கையுடனே ஜல்லிக்கட்டுக்கு வந்தேன். அரசு பணி கிடைத்தால் மகிழ்ச்சியாக இருக்கும். நண்பர்கள் உறுதுணையாக இருந்தார்கள்” என்றார்.