×

ரூ.1000 கோடி பினாமி வழக்கில் இருந்து அஜித் பவார் விடுவிப்பு!

 

ரூ.1,000 கோடி மதிப்பிலான பினாமி சொத்து வழக்கில் இருந்து அஜித் பவாரை விடுவிப்பதாக வருமான வரித்துறை அறிவித்துள்ளது. 

கடந்த 2021ம் ஆண்டு ரூ.1,000 கோடி மதிப்பிலான அஜித் பவாரின் சொத்துக்களை வருமான வரித்துறை கைப்பற்றியது. அஜித் பவார் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு தொடர்புடைய பல இடங்களில் வருமான வரித்துறை நடத்திய சோதனையில் இந்த சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மகாராஷ்டிராவின் சதாரா பகுதியில் உள்ள சர்க்கரை ஆலை, டெல்லியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு மற்றும் கோவாவில் உள்ள ரிசார்ட் உள்ளிட்ட சொத்துக்களை வருமான வரித்துறை பறிமுதல் செய்தது. 

இந்த நிலையில், ரூ.1,000 கோடி மதிப்பிலான பினாமி சொத்து வழக்கில் இருந்து அஜித் பவாரை விடுவிப்பதாக வருமான வரித்துறை அறிவித்துள்ளது. இந்த சொத்துக்கள் நியாயமான முறையில் வாங்கப்பட்டவை என தெரிவித்துள்ள வருமான வரித்துறை பினாமி வழக்கில் இருந்து அவரை விடுவிப்பதாகவும் தெரிவித்துள்ளது. அஜித் பவார் பாஜக கூட்டணி அரசில் மகாராஷ்டிராவின் துணை முதலமைச்சராக நேற்று முன் தினம் தேர்வு செய்யப்பட்டார். இந்த நிலையில்,
அஜித் பவார் துணை முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு அடுத்த நாள், அவர் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.