கார் பந்தயத்துக்கு போவதற்கு முன் அஜித் பிரதோஷ வழிபாடு
மாமல்லபுரம் மல்லிகேஸ்வரர் கோயிலுக்கு வந்து ருத்ராக்ஷ மாலையை பெற்று கொண்டபோது, திரும்ப முயலும்போது பக்தர்கள் சூழ்ந்து கொண்டதால் வெளியேற முடியாமல் நடிகர் அஜித் தவித்தார்.
பிரபல தமிழ்திரைப்பட முன்னணி நடிகர் அஜித்குமார் கார் பந்தய வீரர் ஆவார். இவர் அடுத்த வாரம் இத்தாலியில் நடைபெற உள்ள கார் பந்தய போட்டியில் கலந்து கொள்ள உள்ளார். இந்த கார் ரேசில் நடிகர் அஜித் வெற்றி பெற வேண்டி அவரது நண்பர் கார்த்திகேயன் என்பவர் மாமல்லபுரம் மல்லிகேஸ்வரர் கோயிலில் சிறப்பு பூஜை, வழிபாடு செய்து ருத்ராக்ஷ மாலை வழங்குவதாக வேண்டி கொண்டார். அதன் பேரில் ருத்ராக்ஷ மாலையை பெற்றுக்கொண்டு, சில லிங்க வழிபாடு செய்ய நடிகர் அஜித் இன்று இக்கோயிலுக்கு வந்தார். இக்கோயிலில் பிரதோஷ விழாவுக்கு வந்திருந்த பக்தர்கள் நடிகர் அஜித் வந்ததை பார்த்து திபுதிபு ஓடி இக்கோயிலின் மூலஸ்தான வாசலில் சூழ்ந்து கொண்டனர்.
பிறகு நடிகர் அஜித்-க்கு மாலை அணிவித்து ருத்ராக்ஷ மாலை வழங்கப்பட்டது. அதனை பெற்று கொண்டு அவர் வெளியேற முற்பட்ட போது பக்தர்கள் சூழ்ந்து கொண்டு செல்பி எடுக்க முயன்போது மிகவும் தர்ம சங்கடத்தில் கர்ப்பகிரக மூலஸ்தானத்தை விட்டு வெளியேற முடியாமல் 10 நிமிடங்கள் தவித்தார். பிறகு ஒரு வழியாக வேகமாக அவர் செல்ல முயன்றபோது பக்தர்கள் அவரை பின்தொடந்து ஓடினர். பிறகு காரில் ஏரி செல்லமுடியாத அளவில் பக்தர்கள் அவரது காரை சூழ்ந்து கொண்டனர். பிறகு பாதுகாவலர்கள் பக்தர்களை விளக்கி வழி ஏற்படுத்தியவுடன் அவரது கார் நீலாங்கரை வீட்டிற்கு புறப்பட்டு சென்றது. பக்தர்களின் செயலால் சுதந்திரமாக அவர் சிவ தரிசனம் செய்ய முடியாமல் அவசர, அவசரமாக 20 நிமிடங்களில் சாமி தரிசனம் செய்துவிட்டு சென்றதை காண முடிந்தது.