அஜித் ரசிகர்கள் தொடங்கிய ‘தமிழக மக்கள் கழகம்’
நடிகர் அஜித் ரசிகர்கள் ஒருங்கிணைந்து ‘தமிழக மக்கள் கழகம்’ என்ற புதிய கட்சியை தொடங்கி புதிய கொடியையும் அறிமுகம் செய்துள்ளனர்.
நடிகர் அஜித் அரசியலுக்கு வர மாட்டேன் என்றும், தமக்கு எந்த அரசியல் கட்சியும் அல்லது அரசியல் ஈடுப்பும் இல்லை என்றும் பல முறை தனது ரசிகர்கள் மற்றும் பொதுவெளியில் தெளிவுபடுத்தியுள்ளார். இருப்பினும் அவரது அரசியல் பிரவேசம் குறித்தான விவாதங்கள் தமிழ்நாட்டில் தொடர்ந்து எழுந்து வருகின்றன. ஆனால் இதுவரை அஜித் எந்தவொரு அரசியல் கருத்தையும் வெளிப்படுத்தியதில்லை.
சமீபத்தில், முதலமைச்சர் விஜய் லண்டன் சென்று அஜித் பங்கேற்ற கார் பந்தயத்தைத் தொடங்கி வைத்த நிகழ்வு மற்றும் அவர்களின் சந்திப்பு அரசியல் அரங்கில் பெரும் பேசப்பொருளானது. இந்நிலையில் நடிகர் அஜித் ரசிகர்கள் ஒருங்கிணைந்து ‘தமிழக மக்கள் கழகம்’ என்ற புதிய கட்சியை தொடங்கி புதிய கொடியையும் அறிமுகம் செய்துள்ளனர். இந்நிகழ்வு உளுந்தூர்பேட்டையில் அரங்கேறியுள்ளது.