×

அஜித்தின் ’டேர் டெவில்’ படப்பிடிப்பு நவ.2ல் தொடக்கம்

 

 

 

அஜித் குமார் நடிப்பில், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகவுள்ள 'டேர் டெவில்' திரைப்படத்தின் படப்பிடிப்புத் நவம்பர் 2ஆம் தேதி நடைபெறவுள்ளது.

நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் சென்னையில் நடைபெறவுள்ள கார் மற்றும் பைக் பந்தயப் போட்டிகளில் நடிகர் அஜித் கலந்துகொள்ளத் திட்டமிட்டுள்ளதால், அக்டோபரில் முழுவீச்சில் படப்பிடிப்பு தொடங்குமா என்பதில் சந்தேகம் எழுந்தது. இந்நிலையில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடிக்கும் ‘டேர் டெவில்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நவம்பர் 2ம் தேதி தொடங்குவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ள படக்குழு, அதற்கான போஸ்டரையும் வெளியிட்டுள்ளது. அஜித்தின் 64-வது படமான இப்படத்தை ஷாலினி அஜித்குமார் தயாரிக்கிறார். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.