காவியா - அனிருத் வரவேற்பில் அஜித்-தோனி!
Nov 23, 2026, 10:16 IST
சன் குழும தலைவர் கலாநிதி மாறனின் மகள் காவியா கலாநிதி மாறன் - இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் திருமண வரவேற்பு விழா இரண்டாவது சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.
இந்த வரவேற்பு விழாவில் திரையுலகம், அரசியல், கிரிக்கெட் உலகின் முக்கிய பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். வரவேற்பு விழாவில் பங்கேற்க வருகை தந்த முன்னாள் இந்திய கிரிக்கெட் கேப்டன் எம்.எஸ்.தோனி மற்றும் அவரது மனைவி சாக்ஷி தோனி ஆகியோர் மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர். தோனியை பார்த்ததும் ரசிகர்கள் உற்சாகமடைந்தனர். இந்த விழாவின் ஹைலைட்டாக அமைந்தது அஜித்குமார் விழாவில் கலந்து கொண்டது தான். இரண்டு தலைகள் ஒரே இடத்தில்... என்று ரசிகர்கள் சமூக வலைதளங்களில் புகைப்படங்களை வைரலாக்கி வருகின்றனர். இருவரும் மணமக்களை நேரில் சந்தித்து வாழ்த்து கூறியதாக கூறப்படுகிறது.