#JUST IN : மகாராஷ்டிர துணை முதல்வர் அஜித் பவாரின் உடல் தகனம்..!
பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக மராட்டிய துணை முதல்-மந்திரி அஜித் பவார் சிறிய ரக விமானத்தில் நேற்று காலை பயணம் செய்தார். அவருடன் பாதுகாப்பு அதிகாரி ஒருவர், 2 விமானிகள் மற்றும் விமான ஊழியர் ஒருவர் என மொத்தம் 5 பேர் பயணித்தனர்.பாராமதியில் தரையிறங்கும்போது, தரையில் மோதி விமானம் விபத்துக்குள்ளானது. அஜித் பவாருடன் மொத்தம் 5 பேர் உயிரிழந்தனர்.
அஜித் பவார் மறைவுக்கு தலைவர்கள் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்தனர். அஜித் பவாரின் இறுதிச் சடங்கு இன்று முழு அரசு மரியாதையுடன் நடைபெற்றது. இதில் உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்து கொண்டார்.
அஜித் பவாரின் மனைவி சுனேத்ரா மாநிலங்களவை எம்.பி.யாக உள்ளார். அவருக்கு பார்த் மற்றும் ஜெய் என இரண்டு மகன்கள் உள்ளனர். மகாராஷ்டிர மாநில அரசு இன்று பொது விடுமுறை அறிவித்துள்ளது. மூன்று நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என அறிவித்துள்ளது.