×

பழமையை மறக்காத ரஜினிகாந்த்!

நடிகர் ரஜினிகாந்த் நேற்று டிசம்பர் 12-ஆம் தேதி தனது 70-வது பிறந்தநாளை கொண்டாடினார். திரை பிரபலங்கள், பிரதமர் மோடி, ஸ்டாலின், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள், ரசிகர்கள் ஆகியோர் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர். அதுமட்டுமின்றி, “இப்ப இல்லன்னா எப்பவும் இல்ல” என எழுதப்பட்டிருந்த கேக்கை வெட்டி பிறந்த நாளை தனது பண்ணை வீட்டில் கொண்டாடினார். இதுதொடர்பான புகைப்படத்தை அவரது மூத்த மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் ட்விட்டரில் வெளியிட்டார். இந்நிலையில் ரஜினிகாந்தின் இரண்டாவது மகளான
 

நடிகர் ரஜினிகாந்த் நேற்று டிசம்பர் 12-ஆம் தேதி தனது 70-வது பிறந்தநாளை கொண்டாடினார். திரை பிரபலங்கள், பிரதமர் மோடி, ஸ்டாலின், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள், ரசிகர்கள் ஆகியோர் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர். அதுமட்டுமின்றி, “இப்ப இல்லன்னா எப்பவும் இல்ல” என எழுதப்பட்டிருந்த கேக்கை வெட்டி பிறந்த நாளை தனது பண்ணை வீட்டில் கொண்டாடினார். இதுதொடர்பான புகைப்படத்தை அவரது மூத்த மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் ட்விட்டரில் வெளியிட்டார்.

இந்நிலையில் ரஜினிகாந்தின் இரண்டாவது மகளான ஐஸ்வர்யா தனது தந்தை முதலாவதாக வாங்கிய காருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். தற்போது விலையுயர்ந்த காரை வைத்திருந்தாலும் அப்போது வைத்திருந்த TMU 5004 என்ற பதிவெண் கொண்ட அந்தக் காரை ரஜினி இன்று முதல் பராமரித்து வருவது இந்தப் புகைப்படத்தின் மூலம் தெரிய வருகிறது.