×

ஏர்டெல் சேவையில் பாதிப்பு- பயனர்கள் அவதி

 

சென்னை உள்ளிட்ட சில இடங்களில் ஏர்டெல் தொலைத்தொடர்பு சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

சென்னை உள்ளிட்ட சில இடங்களில் ஏர்டெல் தொலைத்தொடர்பு சேவை பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த 45 நிமிடங்களுக்கு மேலாக ஏர்டெல் நெட்வொர்ர்கில் இருந்து அழைக்க முடியவில்லை என இணையதளங்களில் நுகர்வோர்கள் பதிவிட்டுவருகின்றனர்.

சென்னை, மதுரை, நாகை உள்ளிட்ட பகுதிகளிலும் இந்த புகார்கள் அதிகம் எழுந்துள்ளன. ஏர்டெல் நிறுவனத்தின் நான்காம் காலாண்டு நிகர லாபம் 3 சதவீதம் சரிந்து, ரூ.11,022 கோடியாக உள்ளதாக சில மணி நேரத்திற்கு முன் அந்நிறுவனம் அறிவித்த நிலையில், ஏர்டெல் தொலைத்தொடர்பு சேவை பாதிக்கப்பட்டுள்ளது.