☰
×

ஆயுத பூஜையை முன்னிட்டு விமானக் கட்டணம் கிடுகிடு உயர்வு..!

 

ஆயுத பூஜையை முன்னிட்டு சென்னையில் இருந்து இயக்கப்படும் விமானங்களில் கட்டணம் பல மடங்கு உயர்ந்துள்ளது. சென்னை - தூத்துக்குடி இடையே வழக்கமாக ரூ.7,201 ஆக இருக்கும் கட்டணம் ரூ.17,363 ஆகவும், மதுரைக்கு ரூ.5,066-ல் இருந்து ரூ.8,527 ஆகவும் அதிகரித்துள்ளது. கோவைக்கு ரூ.16,601, திருச்சிக்கு ரூ.9,896, கொச்சிக்கு ரூ.18,255, பெங்களூருவுக்கு ரூ.18,041 எனக் கட்டணம் உயர்ந்துள்ளது. சென்னை - ஹைதராபாத் இடையே வழக்கமாக ரூ.4,467 ஆக இருக்கும் கட்டணம் ரூ.21,665 ஆக அதிகரித்துள்ளது.

நாடு முழுவதும் தசரா பண்டிகை, ஆயுத பூஜை விழா, வெகு விமர்சையாக கொண்டாடப்படுவதை ஒட்டி, சனி, ஞாயிறு மற்றும் திங்கள், செவ்வாய் ஆகிய 4 நாட்கள் தொடர் விடுமுறைகள் வருகின்றன. இதை அடுத்து சென்னை நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் வசிப்பவர்கள், 4 நாட்கள் தொடர் விடுமுறையை, சொந்த ஊர்கள் மற்றும் சுற்றுலா தலங்களுக்கு சென்று, மகிழ்ச்சியாக கழிப்பதற்காக, குடும்பத்தோடு வெளியூர் புறப்பட்டு செல்கின்றனர்.

இதை அடுத்து பெரும்பாலான பயணிகள், சென்னை விமான நிலையத்தில் இருந்து, விமானங்களில் பயணம் மேற்கொள்வதால், சென்னையில் இருந்து தூத்துக்குடி, கோவை, சேலம், திருவனந்தபுரம், கொச்சி, பெங்களூர், ஹைதராபாத், விஜயவாடா, மும்பை, டெல்லி, கொல்கத்தா உள்ளிட்ட விமானங்களில், டிக்கெட் கட்டணங்கள், பல மடங்கு அதிகரித்துள்ளன. அதில் மதுரை, திருச்சி விமானங்களில் மட்டும் கட்டணங்கள் பெரிய அளவில் அதிகரிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

எண் வழித்தடம் சாதாரண நாள் கட்டணம் இன்றைய கட்டணம்
1 சென்னை- தூத்துக்குடி ரூ.7,201 ரூ.17,363
2 சென்னை - மதுரை ரூ.5,459 ரூ.8,537
3 சென்னை- திருச்சி ரூ.5,066 ரூ.9,896
4 சென்னை - கோவை ரூ.5,373 ரூ.16,601
5 சென்னை- சேலம் ரூ.4,264 ரூ.12,237
6 சென்னை- திருவனந்தபுரம் ரூ.6,745 ரூ.20,448
7 சென்னை- கொச்சி ரூ.5,986 ரூ.18,255
8 சென்னை- பெங்களூர் ரூ.4,474 ரூ.18,041
9 சென்னை- ஹைதராபாத் ரூ.4,467 ரூ.21,665
10 சென்னை- விஜயவாடா            ரூ.5,272                                    ரூ.14,344
11 சென்னை- மும்பை             ரூ.6,469                                    ரூ.22,353
12 சென்னை- டெல்லி             ரூ.9,208                                    ரூ.23,099
13 சென்னை- கொல்கத்தா             ரூ.8,219                                    ரூ.17,625