×

“என்னது ஜெயலலிதாவா? எம்.எல்.ஏ லீமா ரோஸை வெளுத்து வாங்கிய அதிமுக மகளிரணி

 

மகளிரணி கூட்டத்தில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி, "கட்சியிலிருந்து செல்பவர்களை பற்றி கவலை வேண்டாம். நீங்கள் தொடர்ந்து கட்சி பணியை உத்வேகத்துடன்" பாருங்கள்..  பெண்களுக்கான வாய்ப்பு நமது கட்சியில் அதிகம் ஏற்பட்டிருக்கிறது.. உள்ளாட்சி தேர்தல்களில் போட்டியிட பெண்களுக்கு அதிகம் முக்கியத்துவம் இம்முறை வழங்கப்பட உள்ளது என்பதை தனது Motivational Speech மூலம் உறுதிப்படுத்தி இருக்கிறாராம் இபிஎஸ்.

இந்த சூழலில், எம்.எல்.ஏ லீமா ரோஸ் பேசும்போது, மகளிரணியினர் பெரிதாக அவர் பேச்சை மதிக்காமல், கூச்சல் குழப்பத்தில் முடிந்திருக்கிறது. அவர் பேசிக்கொண்டிருக்கும்போது திடீரென, ”ஜெயலலிதா அம்மையார்” என வாய்விட்ட லீமா ரோசுக்கு அந்த இடத்திலேயே சத்தம் போட்டு எதிர்ப்பை பதிவு செய்து டோஸ்  விட்டிருக்கிறார்கள் மகளிரணியினர். "அம்மா" என்றே மறைந்த முதல்வர் ஜெயலலிதாவை அழைத்து வந்த ரத்தத்தின் ரத்த மகளிரணி உறவுகளுக்கு, லீமா ரோசின் பேச்சு பெரும் கோபத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அப்போது, முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி, எழுந்து அவர் பேசியதை சமாளித்து மகளிரணியை சமாதானப்படுத்தியிருக்கிறார். "ரத்தத்தில் ஊறியவர்களுக்கு தான் புரட்சித்தலைவி அம்மாவை அம்மா என்று அழைக்கத்தோன்றும்..புதிதாக வந்தவர் வாய்தவறி சொல்லிவிட்டார்" என கே.பி. முனுசாமி மகளிரணியை அமைதி படுத்தியிருக்கிறார்.

ஏற்கனவே லீமா ரோஸ் தவெக அரசுக்கு ஆதரவாக சட்டமன்றத்தில்  வாக்களித்ததை பொறுத்துக்கொள்ள முடியாமல் உள்ள மகளிரணியினர், லீமா ரோஸ் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் மகளிரணி துணைத்தலைவராக தொடர்வதை விரும்பாமல் குமுறி வருகின்றனர்.