விவசாயிகளின் ஆதரவை அள்ளும் அதிமுக! இபிஎஸ் உடன் உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி சந்திப்பு
Apr 17, 2026, 12:32 IST
அதிமுகவின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள பயிர்க் கடன் தள்ளுபடி, தடுப்பணை கட்டுமானம் போன்ற அறிவிப்புகள் விவசாய சங்கங்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
கடந்த வாரம் தமிழக அனைத்து விவசாயிகள் சங்கம், தமிழக உழவர் சந்தை விவசாயிகள் கூட்டமைப்பு சார்பில் அதிமுகவுக்கு ஆதரவு தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் உழவர் பெருந்தலைவர் நாராயணசாமியின் தமிழக விவசாய சங்க கூட்டமைப்பினர் சேலத்தில் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து அதிமுகவுக்கு ஆதரவு அளித்தனர்.
அப்போது விவசாயிகள் வழங்கிய கோரிக்கைகளை பரிசீலித்து நடவடிக்கை எடுப்பதாக எடப்பாடி பழனிச்சாமி உறுதியளித்தார்.