3வது இடத்துக்கு தள்ளப்பட்ட அதிமுக- தலைமை மீது மீண்டும் அதிருப்தி குரல்
கடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வென்ற சத்யபாமா, தற்போது தவெக சார்பாக போட்டியிட்டு வென்றுள்ளார்.
தாராபுரத்தில் காலை 10.30 மணி வரை அதிமுக வேட்பாளர் பானுமதி முன்னிலை வகித்த நிலையில், அதற்கு பிறகான சுற்றுகளில் முன்னிலை பெற்ற தவெக வேட்பாளர் சத்யபாமா 62,596 வாக்குகள் பெற்று அபார வெற்றி பெற்றுள்ளார். கடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வென்ற சத்யபாமா, தற்போது தவெக சார்பாக போட்டியிட்டு வென்றுள்ளார். இதேபோல் அதிமுக வலுவாக இருந்த மதுராந்தகம் ஒன்றியத்திலும் தவெகவிற்கு அதிக வாக்குகள் கிடைத்துள்ளன. கடந்த திமுக ஆட்சியில் கூட மதுராந்தகம் ஒன்றியம் அதிமுக வசமே இருந்தது. மதுராந்தகம் தொகுதியில் திமுக இரண்டாவது இடத்திற்கு வந்துள்ளது.
மதுராந்தகம் 2026 சட்டமன்ற தேர்தலில் முதல் இடத்தை பிடித்த அதிமுக தற்பொழுது அந்த மதுராந்தகம் இடைத்தேர்தலில் மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. இது அதிமுகவின் தலைமையை கேள்வி எழுப்பும் விதமாகவே அமைந்துள்ளது. அங்குள்ள அதிமுகவின் வாக்குகள் முழுமையாக தமிழக வெற்றி கழகத்தை நோக்கி சென்றுள்ளது. இரண்டு தொகுதியிலுமே அதிமுக மூன்றாவது இடத்தை பெற்றுள்ளது. இது மீண்டும் அதிமுக தலைமை தற்போது கேள்விக்குறியை நோக்கி செல்கிறது. மீண்டும் அதிருப்தி குரல் எழும்ப ஆரம்பிக்க உள்ளது.