×

“தியாகத் தலைவி சின்னம்மா” : அதிமுக சார்பில் ஒட்டப்பட்ட போஸ்டர்களால் பரபரப்பு!

சசிகலாவை வரவேற்று திருச்சியில் அதிமுக சார்பில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சொத்துகுவிப்பு வழக்கில் கடந்த 2017 ஆம் ஆண்டு சசிகலா பெங்களூரு அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் 4 ஆண்டுகால சிறைவாசம் முடிந்து, கடந்த 27 ஆம் தேதி விடுதலை செய்யப்பட்டார். இதனிடையே சிறையில் இருந்த சசிகலா, திடீர் உடல்நலக்குறைவால் பெங்களூரு விக்டோரியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டது. தற்போது தொற்று குறைந்து காணப்படுவதாகவும், உடல்நிலை சீராக இருப்பதாகவும் மருத்துவமனை
 

சசிகலாவை வரவேற்று திருச்சியில் அதிமுக சார்பில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சொத்துகுவிப்பு வழக்கில் கடந்த 2017 ஆம் ஆண்டு சசிகலா பெங்களூரு அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் 4 ஆண்டுகால சிறைவாசம் முடிந்து, கடந்த 27 ஆம் தேதி விடுதலை செய்யப்பட்டார். இதனிடையே சிறையில் இருந்த சசிகலா, திடீர் உடல்நலக்குறைவால் பெங்களூரு விக்டோரியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டது. தற்போது தொற்று குறைந்து காணப்படுவதாகவும், உடல்நிலை சீராக இருப்பதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.சசிகலா உடல்நிலை சரியான பின்பு அவர், பிப்ரவரி முதல் வாரத்தில் தமிழகத்துக்கு வருவார் என்று உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் சசிகலாவின் வருகையையொட்டி திருச்சியில் அதிமுக சார்பில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. திருச்சி மாநகரின் பல்வேறு இடங்களில் சசிகலா வருகையை வரவேற்கும் விதமாக, ‘33 ஆண்டுகள் டாக்டர் இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மாவோடு தவ வாழ்க்கை வாழ்ந்த அ.இ.அ.தி.மு.க பொதுச்செயலாளர் தியாகத் தலைவி சின்னம்மா அவர்களே வருக வருக’ என்று போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது.