அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் புதுச்சேரியில் தங்க வைப்பு..!
May 7, 2026, 04:50 IST
தமிழகத்தில் ஆட்சி அமைக்கத் தேவையான அறுதிப் பெரும்பான்மை கிடைக்காததால், தமிழக வெற்றிக் கழகம் எம்.எல்.ஏ.க்களின் ஆதரவைத் திரட்ட தீவிர முயற்சியில் இறங்கியுள்ளது. இதற்கிடையே, அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் புதுச்சேரி அரியாங்குப்பத்தில் உள்ள ஒரு சொகுசு விடுதியில் ரகசியமாகத் தங்க வைக்கப்பட்டுள்ளனர். குதிரை பேரத்தைத் தவிர்க்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இதனால் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.