×

"சுடுகாட்டிற்கு சென்றாலும் மாற்று கட்சிக்கு செல்ல மாட்டேன்" - அதிமுக எம்எல்ஏ சுகுமார்

 

சுடுகாட்டிற்கு சென்றாலும் மாற்று கட்சிக்கு செல்ல மாட்டேன் என அதிமுக எம்எல்ஏ சுகுமார் தெரிவித்துள்ளார்.

ராணிப்பேட்டை மற்றும் திருப்பத்தூர் மாவட்ட நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை கூட்டம் நடத்தினார். ஆனால் கூட்டத்தில் ஆற்காடு எம்.எல்.ஏ. சுகுமார் மற்றும் ஜோலார்பேட்டை எம்.எல்.ஏ. கே.சி.வீரமணியும் புறக்கணித்தனர். இதனையடுத்து அவர்கள் மாற்றுக்கட்சிக்கு செல்லவிருப்பதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவியது.


இதற்கு விளக்கம் அளித்து செய்தியாளர்களிடம் பேசிய ஆற்காடு எம்.எல்.ஏ. சுகுமார், “சுடுகாட்டிற்கு சென்றாலும் மாற்று கட்சிக்கு செல்ல மாட்டேன். கட்சி பொறுப்புகள் என்பது உள்கட்சி விவகாரம். எடப்பாடி பழனிசாமிதான் பொதுச்செயலாளர். அதிமுகதான் என் கட்சி. துணைப் பொதுச்செயலாளரிடம் அனுமதி பெற்ற ராணிப்பேட்டையில் நடந்த வளர்ச்சி பணிகள் கூட்டத்தில் பங்கேற்றேன்” என்றார்.