×

அதிமுக எம்எல்ஏ செல்வராஜூக்கு கொரோனா தொற்று உறுதி!

அதிமுக எம்எல்ஏ செல்வராஜூக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. திருச்சி மாவட்டம் முசிறி தொகுதி அதிமுக எம்எல்ஏ செல்வராஜூக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அதிமுக செயற்குழு கூட்டத்தில் பங்கேற்கும் முன் கொரோனா பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் தொற்று இருப்பது உறுதியானது. கொரோனா உறுதியான எம்எல்ஏ செல்வராஜ் திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனிடையே சட்டமன்ற உறுப்பினர்கள், எம்பிக்கள் என பலரும் கொரோனா தொற்று ஏற்பட்டு அதிலிருந்து மீண்டு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
 

அதிமுக எம்எல்ஏ செல்வராஜூக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

திருச்சி மாவட்டம் முசிறி தொகுதி அதிமுக எம்எல்ஏ செல்வராஜூக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அதிமுக செயற்குழு கூட்டத்தில் பங்கேற்கும் முன் கொரோனா பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் தொற்று இருப்பது உறுதியானது.

கொரோனா உறுதியான எம்எல்ஏ செல்வராஜ் திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனிடையே சட்டமன்ற உறுப்பினர்கள், எம்பிக்கள் என பலரும் கொரோனா தொற்று ஏற்பட்டு அதிலிருந்து மீண்டு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.