×

“வெள்ளை மனம் இல்லாததால் வெள்ளை அறிக்கை கேட்கிறார் ஸ்டாலின்”… அதிமுக அமைச்சர் விமர்சனம்!

தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் கொரோனா தடுப்பு நடவடிக்கையை தமிழக அரசு தொடர்ந்து நடைமுறைப்படுத்தி வருகிறது. இதில் கடந்த 5 மாதங்களாக முன்களப்பணியாளர்கள் தொடர்ந்து பாடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக இ-பாஸ் நடைமுறை, ஊரடங்கு ஆகியவை தொடர்ந்து அமலில் உள்ளது. இதையடுத்து நேற்று மாவட்ட ஆட்சியர்களுடன், தலைமை செயலாளர் சண்முகம் ஆலோசனை நடத்தினார். ஆலோசனையில் கொரோனா தடுப்பு பணி தொடர்பாகவும், இ-பாஸ் தொடர்பாகவும் ஆலோசித்ததாகவும் , ஆகஸ்ட் 31 ஆம் தேதியுடன் ஊரடங்கு முடியவுள்ள நிலையில்
 

தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் கொரோனா தடுப்பு நடவடிக்கையை தமிழக அரசு தொடர்ந்து நடைமுறைப்படுத்தி வருகிறது. இதில் கடந்த 5 மாதங்களாக முன்களப்பணியாளர்கள் தொடர்ந்து பாடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக இ-பாஸ் நடைமுறை, ஊரடங்கு ஆகியவை தொடர்ந்து அமலில் உள்ளது. இதையடுத்து நேற்று மாவட்ட ஆட்சியர்களுடன், தலைமை செயலாளர் சண்முகம் ஆலோசனை நடத்தினார். ஆலோசனையில் கொரோனா தடுப்பு பணி தொடர்பாகவும், இ-பாஸ் தொடர்பாகவும் ஆலோசித்ததாகவும் , ஆகஸ்ட் 31 ஆம் தேதியுடன் ஊரடங்கு முடியவுள்ள நிலையில் ஆலோசனை நடைபெற்றுள்ளது.

இந்நிலையில் இபாஸ் ரத்து குறித்து பேசியுள்ள அமைச்சர் ஆர். பி. உதயகுமார், “தமிழகத்தில் கட்டுக்குள் கொண்டுவர இதுவரை 7 ஊரடங்கு போடப்பட்டுள்ளது. இ பாஸ் தொடர்பாக தலைமைச் செயலாளர் ஆலோசனை நடத்தியுள்ளார். மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி ஆய்வு நடைபெற்று வருகிறது. களநிலவரம் மற்றும் கள ஆய்வுகளின் அடிப்படையில் உரிய அறிவிப்புகளை முதலமைச்சர் வெளியிடுவார்” என்றார்.

வேலைவாய்ப்பு உருவாக்கம், முதலீடுகள் ஈர்த்தது பற்றி தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என ஸ்டாலின் கேட்டதற்கு பதிலளித்த அவர், ‘திமுக தலைவர் ஸ்டாலினுக்கு வெள்ளை மனம் இல்லாததால் வெள்ளை அறிக்கை கேட்கிறார்’ என்றார்.