×

அனுமதியின்றி அதிமுக கூட்டம்- மண்டபத்துக்கு சீல்

 

ஈரோடு மாவட்டம் வைராபாளையத்தில் அனுமதின்றி அதிமுகவினர் கூட்டம் நடத்த பயன்படுத்திய மண்டபத்துக்கு சீல் வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


வரும் 27 ஆம் தேதி நடைபெற உள்ள ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வேட்பு மனு தாக்கல் முடிவடைந்துள்ள நிலையில், வேட்பாளர்கள் மற்றும் அரசியல் கட்சியினரின் பிரச்சாரம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனை ஆதரித்து அமைச்சர்கள் கிழக்கு தொகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். ஈரோடு கருங்கல்பாளையத்தில் அமைச்சர்கள் சேகர்பாபு, சக்ரபாணி ஆகியோர் வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தனர். இதேபோல் அதிமுக வேட்பாளர் தென்னரசுவை ஆதரித்து ஆர்.பி.உதயகுமார், எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் வாக்கு சேகரித்துவருகின்றனர். 

இந்நிலையில் ஈரோடு மாவட்டம் வைராபாளையத்தில் உள்ள திருமண மண்டபத்தை அதிமுகவினர் அலுவலகமாக பயன்படுத்திவருவதாக புகார் எழுந்ததை அடுத்து அங்கு போலீசார் சென்றனர். மண்டபத்தில் பணப்பட்டுவாடா நடப்பதாகவும் புகார் வந்தது. இதனையடுத்து தேர்தல் ஆணைய அதிகாரிகள் மண்டபத்தை சோதனை செய்வதற்காக சென்றனர். சோதனைக்கு வந்த அதிகாரிகளை மண்டபத்துக்குள் விடாமல் அதிமுகவினர் தடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.