தி.மு.க.வுடன் சேர்ந்து அ.தி.மு.க. ஆட்சி அமைக்க முயற்சி செய்தது - மரகதம் குமரவேல்..!!
Sep 25, 2026, 15:33 IST
என் மேல் வைக்கின்ற ஒரே குற்றச்சாட்டு, அ.தி.மு.க.வில் இருந்து விலகி த.வெ.க.வில் இணைந்துவிட்டார் என்பது தான். இன்று நான் மேடை ஏறும்போது நான் இருக்கிறேன் என்று கை கொடுத்தவர் என் அண்ணன்.
அந்த நம்பிக்கை தான் வேண்டும். நான் ஏன் ராஜினாமா செய்தேன் என்பது அனைவருக்கும் தெரியும். தி.மு.க.வுடன் சேர்ந்து அ.தி.மு.க. ஆட்சி அமைக்க முயற்சி செய்தது தான் நான் ராஜினாமா செய்த காரணம். என் தந்தை புரட்சித்தலைவர் வீட்டில் தோட்ட வேலை செய்தவர். ஆனாலும் அவர் குடும்பத்தில் ஒருவராக இருந்தார்.
புரட்சித்தலைவர் அவர்களால் பெயர் வைக்கப்பட்டு வளர்ந்தவள் நான். அம்மா (ஜெயலலிதா) நான் அரசியலில் அங்கீகாரம் பெற முக்கிய காரணம் என்று மரகதம் குமரவேல் கூறியுள்ளார்.