×

அதிமுக ஐ.டி. பிரிவுடன் ஈபிஎஸ் ஆலோசனை

 

அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவினருடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை மேற்கொள்கிறார்.

நாடாளுமன்றத் தேர்தல் இன்னும்  சில மாதங்களில் நடைபெற உள்ள நிலையில் அதற்காக அனைத்து கட்சிகளும் தங்களை தயார் படுத்தி வருகின்றன.  குறிப்பாக நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெறும் நோக்கில் கட்சி சார்ந்த பல்வேறு கருத்துக்களை முன்வைக்கும் வகையில் தகவல் தொழில்நுட்ப அணிகளை பலப்படுத்த தொடங்கியுள்ளன.  திமுக மற்றும் அதிமுக ஆகிய தகவல் தொழில் நுட்ப அணிகள் தங்கள் கட்சிகளை சார்ந்த மற்றும் அரசின் சாதனைகளை தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகின்றன.

இந்நிலையில்  சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் புரட்சி தமிழரின் 'MASTER CLASS' என்ற தலைப்பில் கூட்டம் நடக்கிறது. இளம் தலைமுறை மற்றும் புதிய வாக்காளர்களை ஈர்க்கும் வகையில் சமூக வலைதளங்களில் செயல்படுவது குறித்து ஆலோசனை எனத் தகவல் வெளியாகியுள்ளது.