×

பாக்யராஜ் மரணம் - அதிமுக பொதுச்செயலாளர் இ.பி.எஸ் இரங்கல்..!

 

பாக்யராஜின் மறைவு செய்தி கேட்டு அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். எம்ஜிஆரின் மீது பேரன்பு கொண்டிருந்தவர். தன்னிகரற்ற திரைக்கதை ஆசிரியர் பாக்யராஜ். பாக்யராஜின் குடும்பத்திற்கும், திரையுலகிற்கும் எனது ஆழ்ந்த இரங்கல் என்று எடப்பாடி பழனிச்சாமி பதிவிட்டுள்ளர்.

இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், "இந்திய திரையுலகின் தன்னிகரற்ற திரைக்கதை ஆசிரியர் என்ற பெருமைக்குரிய அவர் மறைவு என்பது ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் அவரது குடும்பதாருக்கும், திரைத் துறையினருக்கும், ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். மறைந்த அவர் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்" என குறிப்பிட்டுள்ளார்.

பிரபல திரைப்பட இயக்குனர், திரைக்கதை ஆசிரியர், நடிகர், இசையமைப்பாளர் என பன்முகத் திறமையாளராக விளங்கிய
திரு. K பாக்யராஜ் அவர்கள் காலமானார் என்ற செய்தி அறிந்து மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.

மாண்புமிகு புரட்சித் தலைவர் எம்ஜிஆர் அவர்கள் மீது பேரன்பு கொண்டிருந்தவர்… pic.twitter.com/0Fex6DLwcm

— Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK (@EPSTamilNadu) June 27, 2026