கட்சியில் இணைந்த ஒரு மணி நேரத்தில் பதவி பெற்ற அதிமுக Ex.எம்எல்ஏ
அ.தி.மு.க முன்னாள் எம்எல்ஏ மற்றும் எம்பியுமான மடத்துக்குளம் சி.மகேந்திரன், திருப்பூர் த.வெ.க புறநகர் தெற்கு மாவட்டச் செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். மதுராந்தகத்தில், முதலமைச்சர் விஜய் முன்னிலையில் கட்சியில் இணைந்த சில மணி நேரத்திற்குள் அவருக்கு தவெக பதவி வழங்கியுள்ளது.
பொள்ளாச்சி முன்னாள் எம்.பி.யும், மடத்துக்குளம் முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ. வான மகேந்திரன் த.வெ.க.வில் இன்று இணைந்தார். இணைந்த கையோடு அவருக்கு திருப்பூர் புறநகர் தெற்கு மாவட்ட செயலாளராக நியமித்தார் அக்கட்சியின் தலைவர் விஜய். மகேந்திரன், செங்கோட்டையனுக்கு ஒரு வகையில் சம்மந்தி உறவு முறை வேண்டும். 2021 ஆம் ஆண்டு அதிமுக சார்பில் வெற்றி பெற்றாலும், கடந்த தேர்தலில் இவருக்கு அதிமுகவில் சீட் கொடுக்கப்படவில்லை, அந்த தொகுதியில் அமமுக சண்முகவேல் போட்டியிடிட்டார். அதிலிருந்து கட்சியிலிருந்து சற்று ஒதுங்கிய இருந்தார். வேலுமணி நிலைப்பாடு எடுத்ததால் மாவட்ட செயலாளர் பதவி பறிக்கப்பட்டது. இந்நிலையில் இன்று த.வெ.க.வில் இணைந்தார். இவருக்கு மா.செ. பதவி வழங்கப்பட்டுள்ளது.