×

அதிமுக Ex.எம்.எல்.ஏ. சத்யா மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கப்பதிவு.. 

 


பண்ருட்டி தொகுதி அதிமுக முன்னாள் எம்எல்ஏ சத்யா மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சொத்து குறிப்பு வழக்கு பதிவு செய்தனர். 


2016 ஆம் ஆண்டு முதல் 2021 வரை பண்ருட்டி தொகுதியில் அதிமுக எம்எல்ஏ-வாக பதவி வகித்தவர் சத்யா பன்னீர்செல்வம். பதவியில் இருந்த காலத்தில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக எம்எல்ஏ சத்யா மீது புகார் எழுந்தது. அவரது கணவர் பன்னீர்செல்வம் 2011 முதல் 2016ம் ஆண்டு வரை  பண்ரூட்டி நகர மன்ற உறுப்பினராக இருந்துள்ளார். அப்போது டெண்டர் விடுவதில் முறைகேடு செய்து ரூ. 20 லட்சம் வரை பணமோசடி செய்ததாக ஏற்கனவே லஞ்ச ஒழிப்பு போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாராணை நடத்தி வருகின்றனர்.    இந்த சொத்துக்குவிப்பு மற்றும் பணமோசடி  வழக்கு தொடர்பாக 10 க்கும் மேற்பட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் அவரது வீட்டில், கடந்த 4 நாட்களுக்கு முன்னர் சோதனை மேற்கொண்டனர்.  

இதில் சத்யா பணியில் இருந்த காலத்தில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்திருப்பதும், தனது கணவர் மற்றும் குடும்பத்தினர் பெயர்களில் சொத்துக்களை வாங்கி குவித்திருப்பதும்  தெரியவந்துள்ளது.  இதனையடுத்து அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ மீது லஞ்ச ஒழிப்பு போலீஸார் வருமானத்துக்கு அதிகமாக ரூ.9.79 கோடி சொத்து குவித்ததாக வழக்கு பதிவு செய்துள்ளனர்.  அவர் பதவிக்காலத்தில்  கூடுதலாக 571.30% சொத்து சேர்த்திருப்பதாக எஃப்.ஐ.ஆரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  சத்யா, அவரது கணவர் பன்னீர் செல்வம் உள்பட 5 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குபதிவு செய்துள்ளது.