×

இன்று இபிஎஸ் தலைமையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்!

 

 சட்டசபை தேர்தலில் அதிமுக கூட்டணியில் 3 கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. பாஜகவுக்கு 27 தொகுதிகளும், பாமகவுக்கு 18 தொகுதிகளும், அமமுகவுக்கு 11 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளன.

இந்தநிலையில், அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் இன்று மாலை மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கூட்டத்தில் சட்டப்பேரவை தேர்தல் வியூகம் குறித்து விவாதிக்கவும், கூட்டணி கட்சிளுக்கு எந்தெந்த தொகுதிகளை ஒதுக்கினால் வெற்றி வாய்ப்பு இருக்கும் என்று கலந்து பேசி முடிவு செய்யப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.