×

புதுச்சேரியில் அதிமுகவை விழுங்கிய பாஜக! வெறும் 2 இடங்களில் போட்டி

 

புதுச்சேரி என்டிஏ தொகுதி பங்கீட்டில் என்ஆர்காங்கிரஸுக்கு 16, பாஜக 10, அதிமுக, லஜகவுக்கு தலா 2 என ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் கடந்த முறையை விட அதிமுக மிக குறைந்த தொகுதிகளில் போட்டியிடுகிறது.

புதுச்சேரியில் கடந்த தேர்தலில் என்ஆர்காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட்டதை போல் இம்முறையும் 16 தொகுதிகள் ஒதுக்கப்படுகிறது. அதே நேரத்தில் பாஜகவுக்கு கடந்த முறை 9 தொகுதிகளை விட கூடுதலாக ஒரு தொகுதி சேர்த்து 10 தொகுதிகள் ஒதுக்கியுள்ளனர். அதிமுகவுக்கு கடந்த முறை 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. தற்போது 2 தொகுதிகள் மட்டுமே ஒதுக்குகின்றனர். அதேபோல் புதிய கட்சியான லாட்டரி அதிபரின் லஜகவுக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்படுகிறது.

இதுபற்றி என்டிஏ வட்டாரங்களில் விசாரித்தபோது, "கடந்த தேர்தலில் போட்டியிட்ட தொகுதிகளை உறுதிப்படுத்திய சூழலில் முத்தியால்பேட்டை, லாஸ்பேட்டை தொகுதிகளில் என்ஆர்காங்கிரஸ் இம்முறை போட்டியிடுகிறது. அதே நேரத்தில் மாஹே, ராஜ்பவன் தொகுதிகளை பாஜகவுக்கு விட்டு தந்துள்ளது. இதில் அமைச்சர் தொகுதியான ராஜ்பவனில் பாஜக மாநிலத்தலைவர் ராமலிங்கம் போட்டியிடவுள்ளார்.என்.ஆர்காங்கிரஸில் நடப்பு அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் சிலருக்கு வாய்ப்பு மீண்டும் தரப்போவதில்லை என முடிவு எடுத்து படிப்படியாக ஒப்புதலை ரங்கசாமி வழங்கி வருகிறார்.அதே போல் பாஜகவிலும் முன்னாள் அமைச்சர் உள்ளிட்டோருக்கு வாய்ப்பு இல்லை என்கின்றனர். லஜக கட்சியான காமராஜர் நகரில் கட்சித்தலைவர் ஜோஸ் சார்லஸும், நெல்லித்தோப்பில் பாஜக அமைச்சர் ஜான்குமார் மனைவியும் போட்டியிடுவார்கள் என்றனர். இதுதொடர்பான முறையான அறிவிப்பு இன்றுக்குள் வெளியாகும் என்றனர்.


உத்தேச தொகுதி பட்டியல்

என்ஆர்காங்கிரஸ்: 

ஏனாம்,
தட்டாஞ்சாவடி, 
இந்திராநகர், 
கதிர்காமம்,
மங்கலம்,
திருபுவனை, 
காரைக்கால் வடக்கு, 
நெடுங்காடு, 
நெட்டப்பாக்கம்,
பாகூர்,
ஏம்பலம், 
அரியாங்குப்பம், 
லாஸ்பேட்டை, 
முத்தியால்பேட்டை, 
வில்லியனூர், 
உழவர்கரை.

பாஜக தொகுதிகள்:

காலாபட்டு,
ராஜ்பவன், 
உருளையன்பேட்டை,
 முதலியார்பேட்டை, 
ஊசுடு, 
மண்ணாடிபட்டு, 
மணவெளி,
மாகே,
திருநள்ளாறு,
நிரவி திருப்பட்டினம்,

அதிமுக:  

உப்பளம்
காரைக்கால் தெற்கு

லஜக:

காமராஜர் நகர்
நெல்லி தோப்பு