ஓட்டுக் கேட்க வந்த பாஜக வேட்பாளருக்கு அதிமுக கிளை செயலாளர் முட்டை வீச்சு!
ஓட்டுக் கேட்க வந்த பாஜக வேட்பாளருக்கு அதிமுக கிளை செயலாளர் முட்டை வீச்சு!தென்காசி மாவட்டம் வீரிருப்பு கிராமத்திற்குள் பாஜக வேட்பாளருக்கு வாக்கு சேகரிக்க வந்த அதிமுக ஒன்றிய செயலாளருக்கு எதிர்ப்பு தெரிவித்து அக்கட்சி கிளை செயலாளர் தன்னுடைய ஆதரவாளர்களுடன் காரின் மீது முட்டை வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது.
தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வீரிருப்பு கிராமத்தில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் (அதிமுக) உள்கட்சி மோதல் காரணமாக பரபரப்பு ஏற்பட்டது. வாசுதேவநல்லூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட இந்த கிராமத்தில் கட்சி நிர்வாகிகளுக்குள் கடந்த சில நாட்களாகவே உட்கட்சி பூசல் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த கிராமத்தைச் சேர்ந்த அதிமுக கிளைச் செயலாளரும் ஒன்றிய செயலாளருமான ரமேஷ் தேர்தல் பணிகள் குறித்து எந்தவித ஆலோசனையும் வழங்கவில்லை என்றும், கட்சி நிர்வாகிகளை மதிக்கவில்லை என்றும் குற்றம்சாட்டியுள்ளார்.
இந்த நிலையில், பாஜக வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரிப்பதற்காக கிராமத்திற்குள் வந்ததாக கூறப்படும் அதிமுக ஒன்றிய செயலாளர் ரமேஷின் காரை, அதிமுக நிர்வாகிகள் பொதுமக்கள் என ஏராளமானோர் முட்டை வீசி எதிர்ப்பு தெரிவித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.