×

மோடி வருவதற்குள் அவசர அவசரமாக நடைபெறும் அதிமுக- பாஜக தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை

 

மதுரையில் தேசிய ஜனநாயக கூட்டணியின் தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தையை தொடங்கினார் மத்திய அமைச்சர் பியூஸ் கோயல்.


மதுரையில் நடைபெறும் தேசிய ஜனநாயக கூட்டணியின் மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி மதியம் வர இருக்கின்ற நிலையில் மதுரையிலேயே தொகுதி பங்கீடு தொடர்பாக கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடைபெற இருக்கிறதாக தகவல் வெளியாகி இருந்தது. அதனைத் தொடர்ந்து மதுரை ஜிஆர்டி ஹோட்டலுக்கு எடப்பாடி பழனிச்சாமி அதிமுக முன்னாள் அமைச்சர்கள் உட்பட பலர் முதல் கட்டமாக வருகை தந்தார். கூட்டணி கட்சித் தலைவரான பாமக அன்புமணி மற்றும் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், ஒன்றிய இணை அமைச்சர் எல். முருகன், முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள கட்சியின் தலைவர்கள் அனைவரும் மதுரை சிந்தாமணி பகுதியில் உள்ள ஜிஆர்டி ஓட்டலுக்கு வருகை தந்தனர். 

அதனைத் தொடர்ந்து தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை தொடர்பாக ஆலோசனை நடத்துவதற்காக தமிழக பாஜக தேர்தல் மேலிட பொறுப்பாளர் பியூஸ் கோயல் ஜிஆர்டி ஓட்டலுக்கு வந்தார். அப்போது அங்குள்ள தனி அறையில் பியூஸ் கோயல், எடப்பாடி பழனிச்சாமி, பாமக தலைவர் அன்புமணி, அண்ணாமலை உள்ளிட்டோர் தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். மாலை பிரதமர் மோடி பங்கேற்கும் நிகழ்ச்சியில் தொகுதி பங்கீடு தொடர்பான முக்கிய அறிவிப்புகள் வெளியிட வாய்ப்பு இருக்கிறது என தகவல் வெளியாகி இருக்கிறது.