தவெக அரசை கண்டித்து அ.தி.மு.க., ஆர்ப்பாட்டம் அறிவிப்பு..!!
Jun 13, 2026, 09:32 IST
அ.தி.மு.க., பொதுச் செயலர் பழனிசாமி வெளியிட்ட அறிக்கை:
விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் வாங்கியுள்ள பயிர்க் கடன்களை தள்ளுபடி செய்வது சம்பந்தமாக, த.வெ.க., அளித்த தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும்.
அதோடு, தமிழகத்தில் நிலவி வரும் அறிவிக்கப்படாத மின்வெட்டை, போர்க்கால அடிப்படையில் சரி செய்ய வேண்டும் என, த.வெ.க. அரசை வலியுறுத்தி, விழுப்புரம் மாவட்ட அ.தி.மு.க., சார்பில், வரும் 19ம் தேதி ஆர்ப்பாட்டம் நடக்க உள்ளது.
விழுப்புரம் நகராட்சி திடலில், காலை 10:00 மணிக்கு நடக்கும் ஆர்ப்பாட்டத்தில், அனைத்து நிர்வாகிகளும் கலந்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.