#BREAKING அகல் விளக்கு பதிப்பக உரிமையாளர் மோகன் கைது
Nov 16, 2026, 18:56 IST
அகல் விளக்கு பதிப்பக உரிமையாளர் மோகன் கைது செய்யப்பட்டார்.
தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை காலை முதல் சோதனை நடத்தி வந்த நிலையில் தற்பொழுது அதிரடியாக அகல்விளக்கு மோகன் அகல்விளக்கு பதிப்பகத்தின் உரிமையாளர் மோகன் கைது செய்யப்பட்டுள்ளார். நூலகங்களுக்கு போலி நூல்கள் கொடுத்த வழக்கில் லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்த நிலையில் கைது செய்யப்பட்டார்.
கடந்த 3 ஆண்டுகளில் அகல் விளக்கு, பீனிக்ஸ் பதிப்பகங்களிடமிருந்து ரூ.1.74 கோடிக்கு நூல்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. புத்தக கொள்முதல் வழக்கில் முதல் குற்றவாளியாக அகல் விளக்கு பதிப்பகத்தின் மோகன் பெயர்சேர்க்கப்பட்டுள்ளது.