☰
×

கட்சிக்காக தியாகம் செய்ய இபிஎஸ் தயார் - அக்ரி கிருஷ்ணமூர்த்தி

 

தொடர்ந்து குதிரை பேரத்தில் ஈடுபட்டு வரும் தவெக மீதும், அதற்குத் துணைபோகும் அமைச்சர்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுக சார்பில் ஆளுநரிடம் புகார் அதிமுக கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி மனு அளித்தார். 

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அக்ரி கிருஷ்ணமூர்த்தி,  “தமிழகத்தில் குதிரை பேரம் தொடர்ந்து நடந்து கொண்டு தான் இருக்கிறது..மூத்த அமைச்சர் செங்கோட்டையன் பேசியதே அதற்கு சான்று...குதிரை பேரத்தை  பற்றி பேசும் அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆளுநரிடம் மனு அளித்துள்ளோம். CV சண்முகம் எப்போ வேணாலும் பேச வரலாம்.அனைவரையும் அரவணைத்து சென்று எந்த தியாகத்தையும் செய்ய இ.பி.எஸ் தயார். அதிமுக-வில் பிரச்சினை எதுவும் இல்லை. முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் உள்ளிட்டோரின் கருத்துகளை கேட்க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எந்த நேரத்திலும் தயாராக இருக்கிறார். அதிமுக எம்எல்ஏ-க்கள் நேரடியாக வந்து பழனிசாமியிடம் கருத்துக் கூறலாம். அதிமுகவை காப்பாற்ற எந்த தியாகத்தையும் செய்ய எடப்பாடி பழனிசாமி தயாராகவே உள்ளார். உரிய நேரத்தில் பொதுக்குழுவை இபிஎஸ் கூட்டுவார்” என்றார்.