×

விவசாய கடன் தள்ளுபடி : கூட்டுறவு சங்க பதிவாளர் இன்று ஆலோசனை!

விவசாய கடன் தள்ளுபடி குறித்து கூட்டுறவு சங்க பதிவாளர், இயக்குநர்கள் காணொலி மூலம் இன்று ஆலோசனை நடத்துகின்றனர். தமிழக சட்டப்பேரவை கூட்டத்தில் 110 விதியின் கீழ் பேசிய முதல்வர் பழனிசாமி, கொரோனா, புயலால் பாதிக்கப்பட்ட தமிழக விவசாயிகளின் கடன் சுமையை குறைக்கும் வண்ணம், 12, 110 கோடி கூட்டறவு பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவித்தார். இதனால், 16.43 லட்சம் விவசாயிகள் பயன் பெறுவார்கள் என்று அவர் அறிவித்தார்.இதற்கு விவசாயிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். இந்நிலையில் விவசாய கடன்
 

விவசாய கடன் தள்ளுபடி குறித்து கூட்டுறவு சங்க பதிவாளர், இயக்குநர்கள் காணொலி மூலம் இன்று ஆலோசனை நடத்துகின்றனர்.

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தில் 110 விதியின் கீழ் பேசிய முதல்வர் பழனிசாமி, கொரோனா, புயலால் பாதிக்கப்பட்ட தமிழக விவசாயிகளின் கடன் சுமையை குறைக்கும் வண்ணம், 12, 110 கோடி கூட்டறவு பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவித்தார். இதனால், 16.43 லட்சம் விவசாயிகள் பயன் பெறுவார்கள் என்று அவர் அறிவித்தார்.இதற்கு விவசாயிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் விவசாய கடன் தள்ளுபடி தொடர்பாக கூட்டுறவு சங்க பதிவாளர் காணொலி மூலம் இன்று ஆலோசனை நடத்துகிறார். அனைத்து கூட்டுறவு சங்க மேலான இயக்குநர்களும் காலை 10:30 மணிக்கு ஆலோசனையில் பங்கேற்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க் கடன் தள்ளுபடி என முதல்வர் அறிவித்துள்ள நிலையில் ஆலோசனை நடைபெறுகிறது.