“அதிமுகவில் பல்வேறு பொறுப்புகள்... சி.வி.சண்முகத்திற்கு இபிஎஸ் போட்ட பிச்சை”- அக்ரி கிருஷ்ணமூர்த்தி
அதிமுகவில் பல்வேறு பொறுப்புகளை சி.வி.சண்முகத்துக்கு பிச்சை போட்டவர் எடப்பாடி பழனிசாமி என முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி கூறியுள்ளார்.
திருவண்ணாமலையில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி, “சி.வி.சண்முகத்தை தவெக இயக்கலாம். அதிமுகவில் பல்வேறு பொறுப்புகளை சி.வி.சண்முகத்துக்கு பிச்சை போட்டவர் எடப்பாடி பழனிசாமி. சட்டத்துறையில் இருந்து கொழுக்கும் கனிமவள துறையை கொடுத்தது எடப்பாடி பழனிசாமிதான். சி.வி.சண்முகம் நாடாளுமன்ற உறுப்பினரானது எடப்பாடி பழனிசாமி போட்ட பிச்சை.
சீட்டுக்கட்டு போல அதிமுக சரிவதாக சி.வி.சண்முகம் பச்சை பொய் சொல்கிரார். சி.வி.சண்முகம்தான் தட்டுத்தடுமாறி வெற்றி பெற்றார். குடும்ப ஆட்சியை பற்றி பேச சி.வி. சண்முகத்திற்கு யோக்யதை இல்லை. அதிமுக மூழ்குகின்ற கப்பல் இல்லை... மரகதம் குமரவேலுக்கு யார் வாய்ப்பு கொடுத்தார்கள் என்று எல்லோருக்கும் தெரியும். வளர்த்த இயக்கத்தை குறை சொல்ல சி.வி.சண்முகத்திற்கு என்ன தகுதி இருக்கிறது..? அ.தி.மு.க, தி.மு.கவுடன் பேச்சுவார்த்தை நடத்தி ஆட்சியமைக்க முயற்சித்ததாக சி.வி.சண்முகம் தவறான தகவலை பரப்புகிறார். சி.வி.சண்முகம் தொடர்ந்து இப்படியே பேசினால் விளைவுகளை சந்திக்க நேரிடும்” என எச்சரித்தார்.