×

“ஆதவ் அதிமுகவில் இணைய துணைப் பொதுச் செயலாளர் பதவி கேட்டு பேரம் பேசினார்”- அக்ரி கிருஷ்ணமூர்த்தி

 

தவெகவில் ஆட்களே இல்லையா? அதிமுகவில் இருந்து முன்னாள் அமைச்சர்களை இழுக்கிறார்கள் என அதிமுக கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி கூறியுள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி, “குதிரை பேரத்தின் மூலம் அதிமுக நிர்வாகிகளை தவெக பக்கம் ஆதவ் அர்ஜூனா இழுத்து வருகிறார். குதிரை பேரத்தின் மூலம் அதிமுக நிர்வாகிகளை இழுப்பது தான் தூய சக்தி தவெகவா? 1996 தேர்தல் தோல்விக்கு பிறகு ஜெயலலிதாவிற்கு துரோகம் செய்துவிட்டு பலர் வேறு கட்சிகளுக்கு சென்றனர். 1996ல் அதிமுகவில் இருந்து விலகியவர்களை உதிர்ந்த ரோமங்கள் என்று கூறியிருந்தார் ஜெயலலிதா. தற்போதும் அதிமுகவில் இருந்து விலகிச் செல்பவர்கள் உதிர்ந்த ரோமங்கள் தான். விசிகவில் இருந்து விலகிய பிறகு அதிமுகவில் இணைய முயற்சி செய்வதர் ஆதவ் அர்ஜூனா. அதிமுகவில் இணைய துணைப் பொதுச் செயலாளர் பதவி கேட்டு பேரம் பேசினார் ஆதவ்.

திமுக, விசிகவில் பல்வேறு முறைகேடுகளை செய்தவர் என்பதால் அதிமுகவில் ஆதவ் அர்ஜூனாவை சேர்க்கவில்லை. திமுகவுடன் இணைந்து ஆட்சி அமைக்க அதிமுக முயற்சி எனும் தவறான தகவலை ஆதவ், செங்கோட்டையன் வெளியிட்டு வருகின்றனர். ஆதவ் அர்ஜூனா என்ன கடவுளா..? அரசியல் என்ன லாட்டரி வியாபாரமா? அதிமுக வேட்பாளர்களை தன்பக்கம் இழுக்கும் வேலையை, ஆதவ் அர்ஜினா இத்தோடு நிறுத்த வேண்டும்” என்றார்.