நாளை அக்னி நட்சத்திரம் ஆரம்பம்..! என்ன செய்யலாம், என்ன செய்ய கூடாது..?
தமிழகத்தில் கோடைக் காலத்தின் உச்சக்கட்ட வெயில் தகிக்கும் காலமே 'அக்னி நட்சத்திரம்' அல்லது 'கத்திரி வெயில்' என அழைக்கப்படுகிறது.
2026ம் ஆண்டில், அக்னி நட்சத்திரம் மே 4ஆம் தேதி தொடங்கி, மே 28ஆம் தேதி வரை உள்ளது. இந்த காலகட்டத்தில் சில விஷயங்களை கண்டிப்பாக செய்ய வேண்டும். சில விஷயங்களை தவிர்க்க வேண்டும் என சாஸ்திர ரீதியாகவும், ஆன்மிக ரீதியாகவும் சொல்லப்படுகிறது. அக்னி நட்சத்திரம் நிகழும் 25 நாட்களும் என்ன செய்யலாம், எவற்றை தவிர்க்கலாம் என்பதை தெரிந்து கொள்ளலாம்.
அக்னி நட்சத்திரத்தில் என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக்கூடாது?
- அக்னி நட்சத்திரத்தில் ஆரோக்கியமாக இருக்க, பக்தர்கள் பூஜை அறையில் கோலங்கள் போடலாம். தினமும் 21 முறை சூரிய காயத்ரி மந்திரத்தை ஜெபிக்கலாம். இது உடல் மற்றும் மனதை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும்.
- இந்த காலகட்டத்தில் நீண்ட தூர பயணங்களைத் தவிர்க்கவும். ஏனென்றால், வெப்பம் காரணமாக உடலில் நீர்ச்சத்து குறைந்து சோர்வு ஏற்படும். பக்தர்கள் தங்கள் நாட்களை அமைதியாகவும், நிம்மதியாகவும் திட்டமிட வேண்டும்.
- சாஸ்திரங்களின்படி, இந்த வெப்பமான காலத்தில் முடி வெட்டுதல், காது குத்துதல், கிரகப்பிரவேசம் செய்தல், பூமி பூஜை செய்தல் அல்லது கிணறு தோண்டுதல் போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும். விவசாய நடவடிக்கைகளான விதை விதைப்பது அல்லது நார் உரிப்பது போன்றவற்றைத் தொடங்கக்கூடாது. செடிகளை வெட்டவோ, குளம் கட்டவோ அல்லது வீட்டை புதுப்பிக்கவோ கூடாது. இந்த செயல்கள் அக்னி நட்சத்திரத்தில் துரதிர்ஷ்டம் அல்லது உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்தும் என்று நம்பப்படுகிறது.
- திருமணம், நிச்சயதார்த்தம், வளைகாப்பு, மாப்பிள்ளை பார்க்கும் நிகழ்ச்சி மற்றும் பூணூல் போன்ற சுப காரியங்களையும் தவிர்க்க வேண்டும்.
- இந்த நாட்களில் செடி கொடி மரங்களை வெட்டக்கூடாது.
- நார் உரிக்க கூடாது.
- விதை விதைக்க கூடாது.
- கிணறு குளம் தோட்டங்கள் அமைக்கக் கூடாது.
- நிலம் மற்றும் வீடுகளில் பராமரிப்புகள் செய்யக்கூடாது.
- வாகனங்களில் நெடுந்தூரம் பயணம் செய்யக்கூடாது.
- முடி இறக்குதல், காது குத்துதல், புது வீட்டுக்கு குடிபோய் பால் காய்ச்சுதல், பூமி பூஜை செய்வது, கிணறு வெட்டுதல் போன்ற விவசாய வேலைகளை தொடங்குவது ஆகியவை தவிர்க்கப்பட வேண்டும்.
அக்னி நட்சத்திரம் தண்ணீர் பந்தல் அமைக்க முடியா விட்டாலும் நம் வீட்டு மொட்டை மாடியில் வெளிப்புற பகுதிகளில் ஒரு பாத்திரத்தில் தண்ணீரை நிரப்பி வைக்கலாம். மற்ற ஜீவராசிகள் தாகம் தீர்த்துக் கொள்ளும். முடிந்தால் பானை தண்ணீரை வீட்டு வாசலில் வைத்தால் வழிப்போக்கர்கள் தாகத்திற்கு தண்ணீர் அருந்தி விட்டு செல்வார்கள். பசு மாட்டிற்கு கழனி தண்ணீர் பச்சை தண்ணீர் குடிக்க வைக்க வேண்டும். இதன் மூலம் நமக்கு புண்ணியத்தின் பலன் இரட்டிப்பாக கிடைக்கும்.
அக்னி நட்சத்திர நேரத்தில் விசிறி தானம், செருப்பு தானம், நீர் மோர் தானம் போன்ற தானங்கள் அக்னி நட்சத்திர காலத்தில் செய்ய வேண்டிய முக்கிய தானங்களாகும். அது மட்டும் இல்லாமல் குளிர்ச்சியான தயிர் சாதம், எலுமிச்சை சாதம் போன்றவற்றையும் கோவில்களில் தானம் கொடுப்பது புண்ணியத்தை சேர்க்கும்.
ஏழை எளியவர்களுக்கு அன்னதானம் செய்வது ஏழேழு ஜென்மங்களுக்கும் புண்ணியத்தை சேர்க்கும் நல்ல விஷயங்கள் ஆகும்.
அக்னி நட்சத்திர காலங்களில் கண்டிப்பாக நாம் ஒரு மரமாவது நட வேண்டும். உலகிலேயே மிக புண்ணிய விஷயம் மரம் நடுவது ஆகும். மரம் நல்லவர் கெட்டவர் என பாகுபாடு இன்றி அனைவருக்கும் நிழல் மட்டுமல்ல காய்கனிகளையும் கொடுக்கும்.
அதேபோல் எத்தனையோ பறவைகளுக்கு வாழ் விடமாகவும் இருக்கும். கோடையில் நிழலில் இளைப்பாறும் மனிதர்களின் மனதிருப்தியும் பறவைகளின் மகிழ்வும் நமக்கு புண்ணியமாக கிடைக்கும். அதனால் இந்த அக்னி நட்சத்திரக் காலங்களில் அனைவரும் மரம் நடுவது மிகப் பெரிய புண்ணியமாகும். மரங்களை தாராளமாக நடலாம்.
அக்னி நட்சத்திர காலத்தில் செய்ய வேண்டியதை செய்தும் செய்யக்கூடாதவை தவிர்த்தும் இருப்பது மிகவும் சிறப்பானது.