☰
×

#BREAKING TNPSC-க்கு வயது வரம்பு 5 ஆண்டுகள் உயர்வு!

 

அரசுப் பணிகளில் நேரடி நியமனத்திற்கான வயது உச்சவரம்பை 5 ஆண்டுகள் உயர்த்தி முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார். BC, BC(M), MBC & DNC, SC, ST மற்றும் ஆதரவற்ற விதவைகளுக்கு ஏற்கெனவே உள்ள வயதுச் சலுகையுடன் கூடுதலாக 5 ஆண்டுகள் உயர்வு வழங்கப்படும். இந்த வயது உச்சவரம்பு உயர்வு 30.10.2026 முதல் ஐந்து ஆண்டுகளுக்கு நடைமுறையில் இருக்கும்.

அரசுப் பணிகளுக்கான வயது உச்சவரம்பு 5 ஆண்டுகள் உயர்வு!

போட்டித் தேர்வுகளின் கோரிக்கையை ஏற்று, அரசுப் பணிகளில் நேரடி நியமனத்திற்கான வயது உச்சவரம்பினை 5 ஆண்டுகள் உயர்த்தி மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் அவர்கள் உத்தரவிட்டுள்ளார். தமிழ்நாட்டைச் சேர்ந்த போட்டித் தேர்வர்கள் மற்றும் இளைஞர்கள் பெருமளவில் பயனடைவார்கள் என்று அரசு அறிவித்துள்ளது. மேல்வரம்பு வயது உயர்வு இடஒதுக்கீடு பிரிவினருக்கு (BC, BCM, MBC & DNC, SC, ST, ஆதரவற்ற விதவைகள்) ஏற்கனவே உள்ள வயது சலுகையோடு கூடுதலாக அமையும். இந்த வயது உச்சவரம்பு உயர்வு இன்று (30.10.2026) முதல் அடுத்த 5 ஆண்டுகள் வரை  நடைமுறையில் இருக்கும் என அரசு அறிவித்துள்ளது.

1. குரூப் - I பதவிகள்:

- பொதுப் பிரிவினர்: 32-ல் இருந்து 37 ஆக உயர்வு
- ஒதுக்கீட்டுப் பிரிவினர் (BC, MBC, SC, ST): 37-ல் இருந்து 42 ஆக உயர்வு
- மாற்றுத்திறனாளிகள் பொதுப் பிரிவு: 42-ல் இருந்து 47
- மாற்றுத்திறனாளிகள் ஒதுக்கீட்டுப் பிரிவு: 47-ல் இருந்து 52 வரை

2. குரூப் - II & II-A:

- பொதுப் பிரிவு: 30-ல் இருந்து 35
- ஒதுக்கீட்டுப் பிரிவு: உச்ச வயது வரம்பில்லை (ஏற்கனவே)
- மாற்றுத்திறனாளிகள் பொது: 40-ல் இருந்து 45
- மாற்றுத்திறனாளிகள் ஒதுக்கீடு: உச்ச வயது வரம்பில்லை

3. குரூப் - IV:

- பொதுப் பிரிவு: 30-ல் இருந்து 35
- பொதுப் பிரிவில் பட்டதாரி (Having higher qualification): 32-ல் இருந்து 37
- BC, BCM, MBC & DNC: 32-ல் இருந்து 37 / 40-ல் இருந்து 45
- SC, ST மற்றும் ஆதரவற்ற விதவை: 35-ல் இருந்து 40 / 45-ல் இருந்து 50 வரை