மீண்டும் மீண்டுமா..? தமிழகத்தில் டீ, காபி விலை உயர்வு..!
உலகளாவிய சர்க்கரை விநியோகத்தில் ஏற்பட்டுள்ள இறுக்கம், பதுக்கல் உள்ளிட்ட பல்வேறு காரணிகளின் கூட்டு விளைவே தற்போதைய சர்க்கரை விலை பல மடங்கு உயர்ந்துள்ளது. 1 கிலோ சர்க்கரை விலை ரூ40, ரூ50 என விற்கப்பட்ட நிலையில் தற்போது ரூ65, ரூ75 என விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
நாடு முழுவதும் வரலாறு காணாத வகையில் சர்க்கரை விலை உயர்வுக்கு எத்தனால் பெட்ரோல் தான் காரணம் என கூறப்பட்ட நிலையில் அதற்கு மத்திய அரசு மறுத்துள்ளது.
மத்திய அரசு எத்தனால் பெட்ரோல் அறிமுகம் செய்துள்ள நிலையில் எத்தனால் உற்பத்தியில் கவனம் செலுத்துவதால் சர்க்கரை தட்டுப்பாடு ஏற்பட்டுவிட்டதாகவும் கூறப்படுகிறது. ஆனால் இதனை மத்திய அரசு மறுத்துள்ளது.உலகளாவிய சர்க்கரை விநியோகத்தில் ஏற்பட்டுள்ள இறுக்கம், பதுக்கல் உள்ளிட்ட பல்வேறு காரணிகளின் கூட்டு விளைவே தற்போதைய சர்க்கரை விலை உயர்வுக்கு காரணம் என்கிறது மத்திய அரசு.
இந்நிலையில் சர்க்கரை விலை கடுமையாக உயர்ந்துள்ளதால், தேநீர் கடைகளில் டீ, காபி விலையும் அதிகரிக்கும் நிலைமை உள்ளது. பெட்ரோல், டீசல் விலை உயர்வு, சமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக சில மாதங்களுக்கு முன்னர் டீ, காபி விலை கணிசமாக உயர்த்தப்பட்டது. தற்போது சர்க்கரை தட்டுப்பாடு காரணமாக மீண்டும் டீ, காபி விலை ரூ20, ரூ25 என உயரக் கூடும் என்கிற தகவல் பொதுமக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
சர்க்கரையின் விலை மூட்டைக்குக் கணிசமாக உயர்ந்துள்ளதால், நஷ்டத்தைத் தவிர்க்கும் பொருட்டுத் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் டீ மற்றும் காபி விலையை மீண்டும் உயர்த்த தேநீர் கடை உரிமையாளர்கள் பரிசீலித்து வருகின்றனர்.
கடந்த வாரம் 50 கிலோ கொண்ட சர்க்கரை மூட்டை ரூ.2,150-க்கு விற்பனையான நிலையில், தற்போது அதன் விலை திடீரென அதிகரித்து ரூ.3,500 ஆக உயர்ந்துள்ளது. வெளிச்சந்தையில் சில்லறை விற்பனையில் ஒரு கிலோ சர்க்கரை விலை ரூ.67 முதல் ரூ.75 வரை உயர்ந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது.