மீண்டும் மீண்டுமா..?? தடாலடியாக உயர்ந்த தங்கம் விலை..!!
Dec 22, 2025, 09:37 IST
தங்கம் விலை கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஒரு பவுன் ரூ.50 ஆயிரத்தை எட்டியது. அதன்பிறகு தங்கம் விலை மின்னல் வேகத்தில் உயர்ந்து வருகிறது. அமெரிக்கா ரஷ்யா இடையோன பதற்றம், இந்தியாவிற்கு எதிரான வரிவிதிப்பு, ரஷ்யா உக்ரைன் போர், இஸ்ரேல் காஸா போர், சீனா உடனான வர்த்தக போர், அமெரிக்காவின் வட்டி விகிதம் குறைவு போன்ற பல்வேறு காரணங்களால் பங்கு சந்தையில் இருந்து முதலிட்டார்கள் பலர் தங்கத்தில் முதலீடு செய்து வருகிறார்கள். இதுவே தங்கம் விலை உயர முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் இன்று தங்கத்தின் விலை சவரனுக்கு 640 உயர்ந்து 99,840-க்கும், கிராமுக்கு 80 உயர்ந்து 12,480-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 உயர்ந்து ஒரு கிராம் ரூ.231க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.