மீண்டும்..மீண்டுமா..?? தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது..!!
ஒரு நாள் தங்கம் விலை குறைந்தால் அடுத்த இரண்டு நாட்களில் அதை விட அதிமாக ஏறிவிடும். கடந்த இரண்டு வருடங்களில் நகை விலை ஏற்ற, இறக்கம் இப்படி தான் இருந்தது. ஆனால் அமெரிக்கா - ஈரான் போருக்கு பிறகு அந்த நிலைமை தலைகீழாக மாறியிருக்கிறது. கடந்த 3 மாதங்களில் ரூ. 15 ஆயிரத்துக்கும் அதிகமாக தங்கம் விலை குறைந்திருக்கிறது.
இதற்கு காரணம் டாலர் மதிப்பு நல்ல நிலைமையில் இருப்பது தான். பொதுவாக டாலர் மதிப்பு சரியும் போது முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடான தங்கத்தை தேர்ந்தெடுப்பர். அதுவே, டாலர் மதிப்பு கூடும்போது, குறுகிய காலத்தில் அதிக லாபம் பெறும் நோக்கில், டாலர்களில் முதலீடு செய்வர். கடந்த சில மாதங்களாக போர் காரணத்தால் கச்சா எண்ணெய் இறக்குமதிக்காக அதிக செலவு செய்யவேண்டிய சூழல் ஏற்பட்டதால், தற்போது அதை ஈடுகட்டும் முயற்சியில் உலக நாடுகள் இறங்கியுள்ளன.
அதனால், தங்கம் தவிர, பிற முதலீடுகளிலும் ஆர்வம் காட்டி வருகின்றனர் முதலீட்டாளர்கள்.
அந்த வகையில் சென்னையில் இன்று தங்கம் விலை உயர்ந்துள்ளது. ஒரு கிராம் தங்கம் ரூ.150 உயர்ந்து ரூ.13,700க்கும், சவரனுக்கு ரூ.1,200 உயர்ந்து ரூ.1,09,600க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 உயர்ந்து ஒரு கிராம் ரூ.260க்கும், கிலோவுக்கு ரூ.5,000 உயர்ந்து ரூ.2,60,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
நேற்று (ஜூலை 02) தங்கத்தின் விலை ஒட்டுமொத்தமாக சவரனுக்கு ரூ.2,400 அதிகரித்த நிலையில், வெள்ளி விலை கிலோவுக்கு ரூ.10,000 உயர்ந்தது.
இன்று (ஜூலை 03) தங்கத்தின் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. 22 காரட் ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.1200 உயர்ந்து, ரூ.1,09,600-க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.150 உயர்ந்து ரூ.13,700-க்கு விற்பனையாகிறது.