அரசியலில் திருப்பம் : செங்கோட்டையனை தொடர்ந்து விஜய் கட்சியில் இணைந்த மற்றொரு அதிமுக எம்எல்ஏ..!
Dec 6, 2025, 05:20 IST
அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தவெகவில் இணைந்த நிலையில், தற்போது கன்னியாகுமரி அதிமுக முன்னாள் எம்எல்ஏ முத்துகிருஷ்ணன் தவெகவில் இணைந்துள்ளார்.
1980-ல் கன்னியாகுமரி அதிமுக எம்எல்ஏவாக இருந்தவர் முத்துகிருஷ்ணன். 1980ல் அதிமுக சார்பில் போட்டியிட்ட இவர், 35,613 வாக்குகள் பெற்று 47 சதவீத வாக்குகள் உடன் எம்எல்ஏவாக தேர்வாகியிருந்தார்.ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அதிமுகவில் ஏற்பட்ட குழப்பம் காரணமாக, அதிமுகவிலிருந்து விலகி கன்னியாகுமரி மாவட்ட பாஜக தலைவர் தர்மராஜ் முன்னிலையில் பாஜகவில் இணைந்தார். இந்நிலையில் தற்போது தவெகவில் இணைந்திருக்கிறார்.
கன்னியாகுமரி மார்த்தாண்டத்தில், தவெக நிர்வாகிகள் முன்னிலையில் தன்னை கட்சியில் இணைத்துக்கொண்ட முத்துக்கிருஷ்ணன், விஜய்யை தலைவராக்க தயாராக உள்ளோம் என்று கூறியுள்ளார்.