அண்ணாமலையை தொடர்ந்து புதிய இயக்கம் தொடங்கிய லதா ரஜினிகாந்த் - இயக்கத்தில் சேருவது எப்படி..?
அதில், "அனைவரும் ஒன்றிணைந்து ஒரு பெரும் மக்கள் சக்தியாக உருவெடுத்து பல நல்ல காரியங்களை செய்வோம். 'சிட்டிசன் பிளாட்பார்ம்' என்ற எங்கள் இயக்கத்தில் ஆர்வம் இருக்கக்கூடிய யார் வேண்டுமானாலும் சேரலாம். பெரும் மக்கள் சேவையாக, மக்கள் சக்தியாக உருவாகி இந்த சமூகத்திற்கு பல நன்மைகளை செய்ய அனைவரும் முன் வாருங்கள். ஒன்று சேருவோம்.
ஆக்கப்பூர்வமான மக்களுக்கான காரியங்களை செய்வோம். மூத்த குடிமக்கள், ஐஏஎஸ், ஐபிஎஸ், அரசு அதிகாரிகள், ஆசிரியர்கள் என அனைத்து தரப்பினரும் உங்களின் அனுபவத்தை எங்களுக்கு கொடுக்கலாம். எங்களுடன் இணைந்து தமிழ்நாட்டுக்காகவும், தொகுதிக்காகவும் நீங்கள் வேலை செய்யலாம். உள்ளூர் தலைவர்களை உருவாக்க நாங்கள் விரும்புகிறோம்" என கூறியுள்ளார்.
அத்துடன், இந்த இயக்கத்தில் இணைவதற்கான விபரங்களையும் தமது வீடியோவில் லதா ரஜினிகாந்த் அளித்துள்ளார். முக்கியமாக இயக்கத்தில் சேருவதற்காக தனி செல்ஃபோன் எண்ணையும் (7550080515). makkalmedaitn12@gmail.com என்கிற மின்னஞ்சல் முகவரியையும் அவர் கொடுத்துள்ளார்.
பாஜக-வில் இருந்து விலகி அண்ணாமலை 'வி த லீடர்' (We The Leader) எனும் இயக்கத்தையும் அவர் தொடங்கி உள்ளார். விரைவில் இதை அரசியல் கட்சியாக மாற்றி 2031 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட திட்டமிட்டு உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். அண்ணாமலையின் இந்த அறிவிப்பு ஏற்கனவே தமிழகத்தை பரபரப்பாக்கியுள்ள இந்த சூழலில் கூடுதல் விறுவிறுப்பாக நடிகர் ரஜினிகாந்த்தின் மனைவி லதா ரஜினிகாந்த், புதிய இயக்கத்தை தொடங்கியுள்ளதாக அறிவித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக மக்கள் அனைவருக்கும் வணக்கம், "மக்கள் மேடை" எனும் மக்கள் சக்தி யின் மூலமாக இன்று முதல் வலைதளங்களில் உங்களுடன் பயணிக்க.#MakkalMedai #PeoplesMovement #LathaRajinikanth pic.twitter.com/6Wneww8k73
— MakkalmedaiTN (@Makkalmedaitn) June 4, 2026