50 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சைக்கிளில் அதிரடியாக களமிறங்கிய போலீஸ்..!
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலைச் சுற்றியுள்ள நான்கு சித்திரை வீதிகளில் இருசக்கர வாகனங்கள் உள்ளிட்ட வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், அப்பகுதியில் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள காவல்துறையினர் சைக்கிள் ரோந்து பணியை மீண்டும் தொடங்கியுள்ளனர்.சித்திரை வீதிகளில் இருசக்கர வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் சைக்கிளில் ரோந்து சென்று பக்தர்களுக்கு அறிவுரை வழங்கிய போலீஸ்..
இதற்காக 5-க்கும் மேற்பட்ட சைக்கிள்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளன. காவல்துறையினர் சைக்கிள்களில் கோவிலைச் சுற்றியுள்ள வீதிகளில் ரோந்து சென்று, பொதுமக்கள் மற்றும் பக்தர்களின் பாதுகாப்பை கண்காணித்து வருகின்றனர்.சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு காவல்துறையினர் சைக்கிள்களில் ரோந்து பணியில் ஈடுபட்டதாக கூறப்படும் நிலையில், தற்போது மீண்டும் சைக்கிள் ரோந்து சேவை தொடங்கப்பட்டுள்ளது பொதுமக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
50 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சைக்கிளில் அதிரடியாக களமிறங்கிய போலீஸ்..!
— Polimer News (@polimernews) August 26, 2026
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலை சுற்றி சித்திரை வீதிகளில் இருசக்கர வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் சைக்கிளில் ரோந்து சென்று பக்தர்களுக்கு அறிவுரை வழங்கிய போலீஸ்..#Madurai | #Police |… pic.twitter.com/8p7sF45QEa