×

15 ஆண்டுகளுக்கு பின் காரைக்காலில் மீண்டும் நிகழ்ந்த அதிசயம்!

 

வங்கக்கடலில் புதிதாக உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியின் காரணமாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. நாளை வரை கனமழை தொடரும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையே வெள்ளத்தில் மூழ்கி பல்வேறு இடங்களுக்குள் வெள்ள நீர் புகுந்துள்ளது. டெல்டா மாவட்டங்களில் பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன. விவசாயிகள் பெரும் வேதனையடைந்துள்ளனர்.

பொதுமக்களின் அன்றாட வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியிலும் இதெ நிலைமை தான். காரைக்காலில் நேற்று காலையில் மிதமாக மழை பெய்ய தொடங்கியது. ஆனால் பிற்பகலில் தீவிரமடைந்து மிக கனமழையாக நள்ளிரவு வரை மழை கொட்டித்தீர்த்தது. அங்கு கடந்த 24 மணி நேரத்தில் 26 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. இதற்கு முன்பு 2005ஆம் ஆண்டு நவம்பர் 8 ஆம் தேதி தான் 30 செ.மீ. மழை பெய்தது. இதுவே அங்கு பதிவான அதிகபட்ச மழை அளவு. 15 ஆண்டுகளுக்குப் பிறகு காரைக்காலில் வடகிழக்குப் பருவமழைக் காலத்தில் அதிக மழை பதிவாகி உள்ளது.