முதல்வருடன் அரசு தலைமை வழக்கறிஞர் சந்திப்பு - தீபம் ஏற்றுவது தொடர்பான ஆலோசனை
சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் ஜோசப் விஜய்யுடன் அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண் ஆலோசனை நடத்திவருகிறார்.
திருப்பரங்குன்றம் தீபத்தூணில் கார்த்திகை நாளன்று மட்டும் தீபம் ஏற்ற உச்சநீதிமன்றம் அனுமதி அளித்தது. ஒரு முறை தீபம் ஏற்றும் உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு மறு சீராய்வு மனு தாக்கல் செய்தது. அந்த மனு இன்று விசாரணைக்கு வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. நீதிபதிகள் அரவிந்த் குமார், விப்புல் பஞ்சோலி அமர்வு இன்று இல்லை என்பதால் மறு சீராய்வு மனு இன்று விசாரணைக்கு வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. நாளை மறுசீராய்வு மனு உச்ச நீதிமன்றத்தில் வராது என்று கூறுகிறார்கள். காரணம் செவ்வாய்க்கிழமை உச்ச நீதிமன்றம் விடுமுறை. ஆகவே நாளை மாலை கண்டிப்பாக திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றப்படும் எனக் கூறப்படுகிறது
சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் ஜோசப் விஜய்யுடன் அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண் ஆலோசனை நடத்திவருகிறார். திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்ற வேண்டும் என்ற உச்சநீதிமன்றத்தின் இடைக்கால தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனுத்தாக்கல் செய்துள்ள நிலையில் இந்த சந்திப்பு நடைபெற்றுவருகிறது.