ஐஸ்கிரீம் தயாரிப்பில் கலப்படமா?- உணவு பாதுகாப்பு துறை எச்சரிக்கை
கொளுத்தும் கோடை வெயில் காரணமாக தமிழகம் முழுவதும் ஐஸ்கிரீம் உற்பத்தி மற்றும் விற்பனை அதிகரித்துள்ளது.
கொளுத்தும் கோடை வெயில் காரணமாக தமிழகம் முழுவதும் ஐஸ்கிரீம் உற்பத்தி மற்றும் விற்பனை அதிகரித்துள்ளது. இந்நிலையில் சந்தையில் தேவை அதிகரித்திருப்பதால் உரிய உரிமம் இல்லாமல் ஐஸ்கிரீம் செய்ய வாய்ப்பு இருக்கிறது. இயற்கை சர்க்கரைக்கு மாறாக சுவைக்காக நிறமிகள் மற்றும் செயற்கை சர்க்கரையை கலக்க வாய்ப்புள்ளதாகவும், ஐஸ்கிரீம் மற்றும் குளிர்பானம் தயாரிப்பில் அசுத்தமான நீர் பயன்படுத்துவது உள்ளிட்ட கலப்படங்கள் அதிகரிக்கக்கூடும் என்றும் கூறியுள்ள உணவு பாதுகாப்புத்துறை, குளிர்பானங்களில் பாஸ்போரிக் அமிலம் போன்ற கலப்படங்கள் சேர்க்க கூடாது என எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்நிலையில் ஐஸ்கிரீம் தயாரிப்பு நிறுவனங்கள் முறையாக உணவு பாதுகாப்புத் துறையின் விதிமுறைகளை கடைபிடிக்கிறார்களா என தீவிரமாக கண்காணிக்க அதிகாரிகளுக்கு உணவு பாதுகாப்புத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. பாதுகாப்பு விதிமுறைகளை மீறினால் கடும் நடவடிக்கை என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது. மூலப்பொருட்கள் தயாரிப்பு, காலாவதி தேதி, உணவு பாதுகாப்பு உரிமம் ஆகியவற்றை ஆய்வு செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.